Vidiyal Thedum Vithigal
()
About this ebook
எல்லாம் விதி என்பது மடமை. நடைமுறை விதிகளை கடைபிடிப்பது கடமை. முன்னோர் இட்ட விதிகள் அங்ஙனமே வேண்டும் என்போன் அடிமை. 'விடியல் தேடும் விதிகள்' கவிதைத் தொகுதி விடிவை எதிர்நோக்கி இருக்கும் இயற்கையின் பதிவு. பெண்ணினத்தின் குரல். ஒடுக்கப்பட்டோரின் உரிமை முழக்கம். மகான்களின் மனசாட்சி. மனிதநேயத்தின் ஆதங்கம். அடுத்த தலைமுறைக்கு ஓர் ஆற்றுப்படை.
Read more from Kumarithozhan
Iruthalai Mirugamum Oyatha Aattamum Rating: 0 out of 5 stars0 ratingsTholviyil Kalankel Rating: 0 out of 5 stars0 ratings
Related to Vidiyal Thedum Vithigal
Related ebooks
Aamam / Illai Rating: 0 out of 5 stars0 ratingsAga Suvadugal Rating: 0 out of 5 stars0 ratingsMudiyatha Mudivu Rating: 0 out of 5 stars0 ratingsNadhiyoram Rating: 0 out of 5 stars0 ratingsUdalengum Oru Sirumi Rating: 0 out of 5 stars0 ratingsMitchamirukkum Eeram Rating: 0 out of 5 stars0 ratingsVanamalli Rating: 0 out of 5 stars0 ratingsThendral Odiya Thisai Rating: 0 out of 5 stars0 ratingsParavaigalin Isaiyamaippaalan Rating: 0 out of 5 stars0 ratingsOru Koppai Vithi Rating: 0 out of 5 stars0 ratingsUdaimul Rating: 0 out of 5 stars0 ratingsTheekkul Viralai Vaithal Rating: 0 out of 5 stars0 ratingsOorpidaari Rating: 0 out of 5 stars0 ratingsAadiya Aattamenna? Rating: 0 out of 5 stars0 ratingsKidakkattum Kazhuthai Rating: 0 out of 5 stars0 ratingsVilaimagalin Vilaiyilla Kaditham Rating: 0 out of 5 stars0 ratingsOru Koppai Manitham Rating: 0 out of 5 stars0 ratingsVergalai Thedi…. Rating: 0 out of 5 stars0 ratingsMuranthadai Rating: 0 out of 5 stars0 ratingsVizhumam 99 Rating: 0 out of 5 stars0 ratingsPoonkothu Rating: 0 out of 5 stars0 ratingsNilavai Kothum Paravai Rating: 0 out of 5 stars0 ratingsPari Ponatha Nenjam...? Rating: 0 out of 5 stars0 ratingsImai Nadanam Rating: 0 out of 5 stars0 ratingsAinthinai Rating: 0 out of 5 stars0 ratingsVanakkathukkuriya Rating: 0 out of 5 stars0 ratingsPorpura Rating: 0 out of 5 stars0 ratingsKarthika Rajkumar Sirukathaigal: Thoguppu 2 Rating: 0 out of 5 stars0 ratingsTharai Thattum Kappalgal Rating: 0 out of 5 stars0 ratingsIravin Katharal Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Vidiyal Thedum Vithigal
0 ratings0 reviews
Book preview
Vidiyal Thedum Vithigal - Kumarithozhan
https://www.pustaka.co.in
விடியல் தேடும் விதிகள்
கவிதைகள்
Vidiyal Thedum Vithigal
Kavithaigal
Author:
குமரித்தோழன்
Kumarithozhan
For more books
https://www.pustaka.co.in/home/author/kumarithozhan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
முன்னுரையாக...
தாயே வணங்குகிறேன்
செம்மொழித் தமிழ்
நதி
சுதந்திரதாகம்
என் அன்னை
கல்லறைச் சுவடுகள்
தமிழன்
அறுத்திடு
டைட்டானிக்
விடிவு வந்ததா?
எங்கே இருக்கிறாய்
சாயம் வெளுக்கும்
கர்மவீரர்
என் கரப் புல்லாங்குழல்
விடியல் தேடும் விதிகள்
சாபமாடா?
சுதந்திர ஊசிகள்
தேன்மொழி
உணர்ந்திடுக
இவன் தமிழனா?
மலை
முடக்கு வாதம்
நெகிழியில்லா உலகு படைப்போம்
மறக்கும் உயிர்கள்
உள்ளக்கீறல்
எட்டப்ப சரித்திரம்
பறக்கும் தேவதை
ரோசாவின் ராசா
ஒரு விதவையின் தூது
யாழ் வேண்டா
விலகிச் செல்லல் முறையோ?
மின்மினிகள்
புறப்படு தமிழச்சி
முன்னுரையாக...
தமிழில் முற்போக்கு இலக்கிய முகாமுக்குள் சந்தத்தோடு மரபுக் கவிதைகள் எழுதுவோர் மிக மிக சிலரே. அவர்களில் முக்கியமானவர் கவிஞர் குமரித்தோழன். ‘விடியல் தேடும் விதிகள்’ என்னும் அவரது இக்கவிதை தொகுப்பு இன்றைய நம் தமிழ் சமூகத்தின் நிலையை உரக்கப் பேசும் நூலாக வந்துள்ளது.
தென்றல் காற்றின் உறைவிடமே என்று தாய் தமிழை மரபான முறையில் வணங்கி இக்கவிப்பயணம் தொடங்குகிறது.
"லெமூரியா என்ற நன்னிலம்
யானமர்ந்த முதல் நிலம்"
என்கிற வரிகள் கவிஞரை லெமூரியா கண்டம் குறித்து சொல்லப்பட்ட கதைகளில் நம்பிக்கை கொண்டவராக காட்டுகின்றன. லெமூரியா குறித்த பல கேள்விகளை அறிவியலாளர்கள் இன்று எழுப்பியுள்ளனர். அவற்றிற்கு விடை காண வேண்டி இருக்கிறது.
"சாதி மத பேதமெல்லாம் முளைக்குது
சதுரங்கமாடி அவைகள் பிழைக்குது
வீதியெல்லாம் கொடிகளின்று பறக்குது
வெற்றிக்கொடி தரையில் வீழ்ந்து கிடக்குது"
என்று மனம் வெதும்பி கவிஞர் பாடுகிறார்.
உழைப்புக்கு மரியாதை இல்லாத இச்சமூக அமைப்பு குறித்த விமர்சனமாக,
"முத்தமிட்டு அறுத்தெடுத்த
முத்து நெல்லு வாய்க்கவில்ல
கிழங்கு வாங்கும் கூலி தானே
கிடைக்குது ஊரிலே கூலியாக"
என்கிற வரிகள் சந்தத்தோடு வந்து விழுகின்றன.
பல கவிதைகள் ஈழத் தமிழர் வாழ்வு குறித்த கவிஞரது கவலைகளை, வேதனையை அழுத்தமான குரலில் பதிவு செய்கின்றன. அப்பிரச்சனை குறித்து இன்னும் ஆழமான அரசியல் பார்வையோடு இக்கவிதைகள் வந்திருக்க வேண்டும். மரபுக் கவிதைகள் மட்டுமின்றி புதுக்கவிதை