14 (எண்)
Appearance
| ||||
---|---|---|---|---|
முதலெண் | fourteen | |||
வரிசை | 14-ஆம் (பதினான்காம்) | |||
எண்ணுரு | tetradecimal | |||
காரணியாக்கல் | 2 · 7 | |||
காரணிகள் | 1, 2, 7, 14 | |||
ரோமன் | XIV | |||
கிரேக்க முன்குறி | tetrakaideca- | |||
இலத்தீன் முன்குறி | quattuordec- | |||
இரும எண் | 11102 | |||
முன்ம எண் | 1123 | |||
நான்ம எண் | 324 | |||
ஐம்ம எண் | 245 | |||
அறும எண் | 226 | |||
எண்ணெண் | 168 | |||
பன்னிருமம் | 1212 | |||
பதினறுமம் | E16 | |||
இருபதின்மம் | E20 | |||
36ம்ம எண் | E36 | |||
எபிரேயம் | י"ד | |||
பாபிலோனிய எண்ணுருக்கள் | 𒌋𒐘 |
14 (பதினான்கு) (fourteen)என்பது தமிழ் எண்களில் ௧௪ அல்லது ௰௪ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண் ஆகும். பதினான்கு என்பது பதின்மூன்றிற்கும் பதினைந்திற்கும் இடைப்பட்ட இயற்கை எண் ஆகும். 14 இல் "நான்கு" என்ற எண் உள்ளதால், இது "பதினான்கு" என்று உச்சரிக்கப்படுகிறது.
கணிதத்தில்
[தொகு]- 14 என்பது ஏழாவது பகு எண் ஆகும்.
- 14 என்பது (இங்கு வடிவிலமைந்த மூன்றாவது அரைப்பகாஎண் ஆகும். (இங்கு பெரிய பகாஎண்).[1]
- மேலும் 14, இரு வெவ்வேறு அரைப்பகாத்தனிகளைக் கொண்ட வரிசையின் இரண்டாவது திரளான (14, 15) இன் முதல் உறுப்பாகவுள்ளது.
- இவ்வரிசையிலுள்ள அடுத்த திரள்(21, 22) ஆகும். இத் திரளிலுள்ள இரு உறுப்புகளின் கூடுதல் 21+22 = 43; 43 ஆனது பதினான்காவது பகா எண் ஆகும்.
- 14, ஒரு ஒரூஉ எண் ஆகும்.
- 14, கேடலான் எண்களில் நான்காவதாகும்.[2]
- 14 ஆய்லரின் டோஷண்ட் சார்பு இல் எந்தத் தீர்வுமில்லாத மிகக்குறைந்த இரட்டை எண் () ஆகும்.[3]
காரணிகள்
[தொகு]பதினான்கின் நேர்க் காரணிகள் 1, 2, 7, 14 என்பனவாகும்.[4]
அறிவியலில்
[தொகு]வேதியியல்
[தொகு]- சிலிக்கானின் அணு எண் 14.
- நைதரசனின் அண்ணளவான அணு எடை 14 ஆகும்.
- f துணைநிலையில் பொருத்தக்கூடிய இலத்திரன்களின் அதிகபட்ச எண்ணிக்கை 14 ஆகும்.
மற்றத் துறைகளில்
[தொகு]14 என்பது :
- நாட்களின் எண்ணிக்கை இருவாரமாக.
- அமெரிக்க அரசியலமைப்பின் பதினான்காவது திருத்தம் என்பது அடிமைகளின் உரிமைகளை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய (புனரமைப்பு) நடவடிக்கையில், ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கியது.
- ஈரேழ்வரிப்பா 14 வரி எண்ணிக்கை கொண்டதாக உள்ளது.
குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sloane, N. J. A. (ed.). "Sequence A001358". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை.
- ↑ "Sloane's A000108 : Catalan numbers". The On-Line Encyclopedia of Integer Sequences. OEIS Foundation. பார்க்கப்பட்ட நாள் 2016-06-01.
- ↑ "Sloane's A005277 : Nontotients". The On-Line Encyclopedia of Integer Sequences. OEIS Foundation. பார்க்கப்பட்ட நாள் 2016-06-01.
- ↑ ஓர் எண்ணின் காரணிகள் அனைத்தும் (ஆங்கில மொழியில்)
- Wiggermann, Frans A. M. (1998), "Nergal A. Philological", Reallexikon der Assyriologie, பார்க்கப்பட்ட நாள் 2022-03-06