1281
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1281 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1281 MCCLXXXI |
திருவள்ளுவர் ஆண்டு | 1312 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2034 |
அர்மீனிய நாட்காட்டி | 730 ԹՎ ՉԼ |
சீன நாட்காட்டி | 3977-3978 |
எபிரேய நாட்காட்டி | 5040-5041 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1336-1337 1203-1204 4382-4383 |
இரானிய நாட்காட்டி | 659-660 |
இசுலாமிய நாட்காட்டி | 679 – 680 |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1531 |
யூலியன் நாட்காட்டி | 1281 MCCLXXXI |
கொரிய நாட்காட்டி | 3614 |
1281 (MCCLXXXI) பழைய யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- ஆகத்து 12 – சப்பான் மீதான இரண்டாவது மங்கோலிய முற்றுகை தோல்வியில் முடிந்தது. பெரும் சூறாவளியினால் (கமிக்காஸ்) பெரும் எண்ணிக்கையான சீன கொரியப் படையினர் (140,00 இற்கும் அதிகமானோர்) உயிரிழந்தனர், 4,000 கப்பல்கள் சேதமடைந்தன.
- அக்டோபர் 29 – சிரியா மீதான மங்கோலியாவின் அபகா கானின் முற்றுகையை மம்லூக் சுல்தான் கலவூன் முறியடித்தார்.
- தொன்மை வாய்ந்த தாவோயிச நூல்களை எரிக்க குப்லாய் கான் உதரவிட்டார்.
- மொன் இனத்தவரின் அரிப்புஞ்சாய் இராச்சியம் முடிவுக்கு வந்தது. இதன் தலைநகர் பம்பூன் (இன்றைய தாய்லாந்தில்) லன்னாதாய் இராச்சியத்தினால் கைப்பற்றப்பட்டது.
- உதுமானியப் பேரரசின் நிறுவனர்உஸ்மான் பே, மத்திய அனத்தோலியாவின் சோகுத் இனத்தவரின் தலைவரானார். இவர் 1299 இல் செல்யூக் இராச்சியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்து உதுமானியப் பேரரசைத் தோற்றுவித்தார்.
- பைசாந்தியரின் தாக்குதலை அடுத்து அல்பேனியா இராச்சியத்தின் நிலப்பரப்பு பெருமளவு குறைந்தது.
- கான்ஸ்டண்டினோபிலில் புதிதாக மீளுருவாக்கப்பட்ட பைசாந்தியப் பேரரசு மீது சிலுவைப் போரை நடத்துவதற்கு திருத்தந்தை நான்காம் மார்ட்டின் உத்தரவிட்டார். பிரெஞ்சு, வெனிசியர்கள் கான்ஸ்டண்டினோபில் நோக்கிச் சென்றனர், ஆனாலும் அடுத்த ஆண்டு அவர்கள் அங்கிருந்து விரட்டப்பட்டனர்.
- மூன்றாம் நிக்கொலாசுக்குப் பின்னர் நான்காம் மார்ட்டின் 189வது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
- சுதேயுப்பாவின் பின் இந்தியாவின் அகோம் பேரரசராக சுபின்பா ஆட்சியேறினார்.
பிறப்புகள்
[தொகு]- ஆகத்து 4 – குலுக் கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1311)