பூபி
பூபி | |
---|---|
ஒரு காலைத் தூக்கியபடி நின்றிருக்கும் ஒரு நீலக்கால் பூபி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | Brisson, 1760
|
மாதிரி இனம் | |
Pelecanus leucogaster Boddaert, 1783 | |
Species | |
For fossil species, see text. |
பூபி (Booby) என்பது சுலா என்னும் பேரினத்தில் உள்ள சுலிடே என்னும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கடற்பறவை. இவை கேன்னட்டு என்னும் பறவையினத்துடன் நெருங்கிய தொடர்புள்ளவை.
சுலா என்னும் பேரினம் பிரெஞ்சு விலங்கியலாளரான மாத்துரின் சாக்குவேசு பிரிசன் என்பாரால் 1760-ஆம் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டது. ஆங்கிலப் பெயரான பூபி என்பது முட்டாள் எனப்பொருள் தரும் போபோ என்னும் எசுப்பானிய மொழிச் சொல்லில் இருந்து பெறப்பட்டது. ஏனெனில் இவை தாமாகவே பறந்து வந்து கடற்பயணத்தில் உள்ள கப்பல்களில் வந்து அமர்வதால் கப்பல் மாலுமிகளால் பிடிக்கப்பட்டு அவர்களுக்கு உணவாகின்றன.
பண்புகள்
[தொகு]பூபிகள் உயரத்தில் இருந்து கடலுக்குள் பாய்ந்து நீருக்கடியில் உள்ள இரையைப் பிடிக்கின்றன. இவற்றில் முகத்தில் உள்ள காற்றுப் பைகள் நீரில் மோதும் போது ஏற்படும் அடியைத் தாங்க உதவுகின்றன. இவை தீவுகளிலும் கடற்கரைகளிலும் கூட்டமாக வாழ்ந்து இனப்பெருக்கம் செய்கின்றன. பூபிகள் பொதுவாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வெளிர்நீல முட்டைகளை தரையிலோ சில சமயங்களில் மரத்தில் உள்ள கூடுகளிலோ இடுகின்றன.