ஜேம்ஸ் கேமரன்
ஜேம்ஸ் கேமரன் James Francis Cameron | |
---|---|
கேமரன் 2010ல் ஒரு நிகழ்ச்சியில் | |
இயற் பெயர் | ஜேம்ஸ் பிரான்சிஸ் கேமரன் |
பிறப்பு | ஆகத்து 16, 1954 ஒன்டாரியோ, கனடா |
தொழில் | திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், கண்டுபிடிப்பாளர் |
நடிப்புக் காலம் | 1978–இன்று |
துணைவர் | ஷரோன் வில்லியம்ஸ்(1978–1984) கெய்ல் அன் கர்ட் (1985–1989) கேத்ரின் பிஜேலோ (1989–1991) லிண்டா ஹமில்டன் (1997–1999) சுசி அமிஸ் (2000–இன்று வரை) |
ஜேம்ஸ் பிரான்சிஸ் கேமரன் (James Francis Cameron) [1]கனடாவைச் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், மற்றும் ஆழ் கடல் ஆராய்ச்சியாளர் ஆவார்.[2][3]
1984 இல் த டெர்மினேட்டர் எனும் அறிவியல் புனைவு திரைப்படத்தினை இயக்கினார். இது பெரிய அளவில் வெற்றி பெற்றது. 1986 இல் ஏலியன்ஸ் எனும் திரைப்படத்தை இயக்கிய பிறகு ஹாலிவுட்டில் பிரபலமான இயக்குநர் மற்றும் எழுத்தாளர் ஆனார். 1991 இல் டெர்மினேட்டர் 2:த ஜட்ச்மண்ட் டே எனும் இவர் இயக்கியத் திரைப்படம் சிறப்பு விளைவிற்காகப் பாரட்டப்பட்டது. 1997 இல் டைட்டானிக் திரைப்படத்தை இயக்கினார். இந்தத் திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த படத்தொகுப்பிற்கான அகாதமி விருது பெற்றது.
டைட்டானிக் திரைப்படத்தை இயக்கிய பிறகு அவதார் (2009 திரைப்படம்) எனும் அறிவியல் புனைவு திரைப்படத்தை சுமார் பத்து வருடங்களாக இயக்கினார். இந்தப் படம் முப்பரிமாண படிம நிலக்குறியீட்டில் எடுக்கப்பட்டது. இந்தத் திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த படத்தொகுப்பிற்கான அகாதமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்தத் திரைப்படத்தின் வெற்றியின் மூலம் வெற்றிகரமான முப்பரிமாண படிம இயக்குநராக கருதப்படுகிறார்.[4] டைட்டானிக் மற்றும் அவதார் படங்களை எடுப்பதற்கு இடையிலான காலகட்டங்களில் பல குறும்படங்களை இயக்கினார். மேலும் இவர் நீருக்கடியில் உள்ளன பற்றிய விபரணத் திரைப்படம் இயக்குவது மற்றும் வெகுதூரத்தில் இருந்து நீருக்கடியில் உள்ள வாகனங்களை இயக்குதல் போன்ற தொழில்நுட்பங்களில் பங்காற்றினார்.[2][3][5] மார்ச்சு 26, 2012 அன்று உலகின் மிக ஆழமான கடற்பகுதியான மரியானா அகழியின் 11 கிமீ ஆழத்திலுள்ள அடிப்பகுதிக்குத் தனியொரு ஆளாகச் சென்று திரும்பி சாதனை படைத்தார்[6].[7][8][9]
ஜேம்ஸ் கேமரன் இயக்கியத் திரைப்படங்கள் வட அமெரிக்காவில் சுமார் $2 பில்லியன் வசூலையும் , உலகம் முழுவதும் சுமர் $6 பில்லியன் வசூலையும் பெற்றுத் தந்தது.[10] கேமரனுடைய டைட்டானிக் மற்றும் அவதார் ஆகிய திரைப்படங்கள் முறையே $2.19 பில்லியன், $2.78 பில்லியன் வசூலைப் பெற்றது. இது வரை வெளியான திரைப்படங்களில் உலக அளவில் அதிக வசூலைப் பெற்றது இந்தத் திரைப்படங்களே ஆகும். 2011 இல் வனிட்ட்ய் ஃபேர் எனும் இதழானது ஹாலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் இயக்குநராக (திரைப்படம்) இவரை அறிவித்தது. 2010 இல் சுமார் $257 மில்லியன் வருமானம் ஈட்டினார்.[11] அக்டோபர், 2013 இல் வெனிசுவேலாவில் புதிதாக கண்டறியப்பட்ட தவளைக்கு திரைத்துறையில் இவர் செய்த சாதனையைப் பாராட்டும் விதமாக இவரின் பெயரையும் சேர்த்து பிரிஸ்திமந்திஸ் ஜேம்ஸ் கேமரூனி எனப் பெயரிட்டனர்.[12][13][14]
முக்கிய படங்கள்
[தொகு]டெர்மினேட்டர் (1984)
[தொகு]த டெர்மினேட்டர் திரைப்படம் (The Terminator) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். ஜேம்ஸ் கேமரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆர்னோல்டு சுவார்செனேகர, மைக்கேல் பியென் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[15] கதையின்படி ஆர்னோல்டு சுவார்செனேகர் 2029 ல் இருந்து அனுப்ப பட்ட ஒரு இயந்திர மனிதன். இவரின் நோக்கம் சாரா கோணரை கொலை செய்வது. இதே நேரம் சாரா கோணரைக் காப்பாற்ற மனிதர்கள் கைல் ரீஸ் எனும் மனிதனை அனுப்புகின்றார்கள். டெர்மினேட்டர், வியாபார ரீதியில் வெற்றிப்படமாக அமைந்தது.
ராம்போ II
[தொகு]ராம்போ II (en:Rambo: First Blood Part II) 1985 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். ஜேம்ஸ் கேமரூன் இந்தத் திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதினார். இத்திரைப்படத்தில் சில்வெஸ்டர் ஸ்டாலோன், ரிச்சர்ட் செரண்ணா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்தப் படமும் வசூலில் சாதனை படைத்தது. இந்தப் படம் 1985ல் வெளியான வெற்றிப் படங்களுள் ஒன்றாக உள்ளது.[16]
டைட்டானிக்
[தொகு]டைட்டானிக் திரைப்படம் பற்றிய கட்டுரையைப் பார்க்க, டைட்டானிக் (திரைப்படம்)
டைட்டானிக் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். ஜேம்ஸ் கேமரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் லியானார்டோ டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் மற்றும் பலர் நடித்திருந்தனர். உலகளாவிய அளவில், 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஈட்டிச் சாதனை நிகழ்த்தியது.[17]
அவதார்
[தொகு]'அவதார் திரைப்படம் பற்றிய கட்டுரையைப் பார்க்க, அவதார் (2009 திரைப்படம்)
அவதார் 2009-ம் வருடம் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும் . சுமார் 1500 கோடி ரூபாய் பொருட் செலவில் தயாரான இப்படம் வசூலில் சாதனை படைத்து முந்தைய சாதனையான டைட்டானிக் படத்தின் சாதனையை முறியடித்தது.[18]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Space Foundation. (n.d.). America's vision: The case for space exploration, p. 42. Retrieved December 12, 2009.
- ↑ 2.0 2.1 Sony (2009). James Cameron returns to the abyss with Reality Camera System. Retrieved December 25, 2009.
- ↑ 3.0 3.1 Thompson A (2009). "The innovative new 3D tech behind James Cameron's Avatar". Fox News. Retrieved December 25, 2009.
- ↑ Glenday, Craig (2013). Guinness Book of Records. p. 204. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-908843-15-9.
- ↑ Parisi P (1998). Titanic and the making of James Cameron: The inside story of the three-year adventure that rewrote motion picture history. New York: Newmarket. Partial text. Retrieved January 5, 2010.
- ↑ Rebecca Morelle (மார்ச்சு 26, 2012). "James Cameron back on surface after deepest ocean dive". பிபிசி செய்தித் தளம். பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 28, 2012.
- ↑ Than, Ker (March 25, 2012). "James Cameron Completes Record-Breaking Mariana Trench Dive". National Geographic Society. பார்க்கப்பட்ட நாள் March 25, 2012.
- ↑ Broad, William J. (March 25, 2012). "Filmmaker in Submarine Voyages to Bottom of Sea". New York Times. https://www.nytimes.com/2012/03/26/science/james-camerons-submarine-trip-to-challenger-deep.html. பார்த்த நாள்: March 25, 2012.
- ↑ AP Staff (March 25, 2012). "James Cameron has reached deepest spot on Earth". MSNBC. பார்க்கப்பட்ட நாள் March 25, 2012.
- ↑ Box Office Mojo (2010). "James Cameron movie box office results". Retrieved February 2, 2010.
- ↑ Newcomb, Peter (March 2011). "Hollywood's Top 40". Vanity Fair (magazine)|Vanity Fair. Archived from the original on July 5, 2011.
- ↑ Sergio Prostak (November 4, 2013). "Two New Frog Species Discovered in Venezuela, One Named after James Cameron". Sci-News.com. பார்க்கப்பட்ட நாள் November 5, 2013.
- ↑ Kok, Philippe J.R. (2013). "Two new charismatic Pristimantis species (Anura: Craugastoridae) from the tepuis of the "Lost World" (Pantepui region, South America)". European Journal of Taxonomy (60). doi:10.5852/ejt.2013.60. http://www.europeanjournaloftaxonomy.eu/index.php/ejt/article/view/181.
- ↑ Michael Destries (April 12, 2014). "Director James Cameron on Vegan Diet: Like I've Set the Clock Back 15 Years". Ecorazzi.com. Archived from the original on செப்டம்பர் 29, 2019. பார்க்கப்பட்ட நாள் April 12, 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Cameron, James (1984-10-26), The Terminator, Arnold Schwarzenegger, Linda Hamilton, Michael Biehn, பார்க்கப்பட்ட நாள் 2018-04-18
- ↑ Rambo: First Blood Part II (1985), பார்க்கப்பட்ட நாள் 2018-04-18
- ↑ Cameron, James (1997-12-19), Titanic, Leonardo DiCaprio, Kate Winslet, Billy Zane, பார்க்கப்பட்ட நாள் 2018-04-18
- ↑ "All Time Worldwide Box Office Grosses", www.boxofficemojo.com (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-04-18
வெளியிணைப்புகள்
[தொகு]http://ஐ[தொடர்பிழந்த இணைப்பு] எம் டிபி வலைத்தளத்தில் ஜேம்ஸ் கேமரன்
- ஜேம்ஸ் கேமரன் இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)
- ஜேம்ஸ் கேமரன் at the Internet Speculative Fiction Database
- James Cameron at Allmovie