உள்ளடக்கத்துக்குச் செல்

உயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உயில் (ஒலிப்பு) (Will and testament) என்பது ஒருவர் இறப்பதற்கு முன்னர், தனது சொத்துக்களை தனது விருப்பப் படி, தனக்குப் பிடித்த நபருக்கு ஏற்படும் உரிமை குறித்து எழுதப்படும் ஆவணம் ஆகும். சொத்துக்கள் பிரிவினை தொடர்பாக அந்த நபர் இறந்ததும், தாவாக்கள், வழக்குகள், சண்டைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக எழுதி வைக்கப்படுகிற ஆவணமாகும். உயில் எழுதுபவர் அவர் விருப்பப்படி, அவரது சொத்துக்களை, தனி நபர், அறக்கொடை நிறுவனத்திற்கும், அறக்கட்டளைகளுக்கும், எந்தக்காரியத்திற்கும் எழுதிவைக்கலாம். உயிலை பதிவு செய்வது என்பது கட்டாயமில்லை. இரண்டு சாட்சிகளோடு சார்பதிவாளர் முன்னிலையில் உயிலை பதிவு செய்து விட்டால் அதற்கு சட்டரீதியான அங்கீகாரம் கிடைத்துவிடும். இந்த ஆவணத்தை ஆவணப் பதிவு அலுவலகத்தில் (சார்- பதிவாளர் அலுவலகம்) உரிய முத்திரைக்கட்டணம், பதிவுக்கட்டணம் செலுத்தி அரசின் முத்திரைத்தாளில் எழுதி பதிவு செய்ய வேண்டும்.

இந்துக்கள், முஸ்லிம்களைத் தவிர, ஏனையோர் திருமணத்திற்குப் பின்னர், மற்றொரு புதிய உயில் எழுதவேண்டும். திருமணத்திற்குப்பின்பு புதிய உயில் எதுவும் எழுதப்படவில்லை என்றால், அந்த நபர் இறந்த பின்னர் வாரிசுரிமைச் சட்டபடி சொத்துக்கள் பிரிக்கப்பட வேண்டும்.

உயிலின் நம்பகத்தன்மைக்காக குறைந்தபட்சம் இரண்டு சாட்சிகள் தேவை. உயிலின் ஒவ்வொரு பக்கத்திலும் அவர்களது கையெழுத்து இருக்க வேண்டும். வாரிசுகள் சாட்சிகளாக இருக்கக் கூடாது. அவர்களது நிரந்தர முகவரியை குறிப்பிட வேண்டும்.[1] ஒரு உயில் மூலம் பயனடைபவர்கள் அந்த உயிலில் சாட்சிக் கையெழுத்திடக்கூடாது. அப்படிக் கையெழுத்திட்டால், அது உயில் சட்டபடி செல்லுபடியாகும் என்றாலும், அதன் மூலம் அவர்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காது. எழுதிவைக்கப்பட்ட பயன்களை அவர்கள் அனுபவிக்க முடியாது.


இந்திய வாரிசுரிமை சட்டம் 1956

Definition : Section 2(h) : ஒருவர் தான் இறந்த பிறகு தன்னுடைய சொத்துகளை எப்படி பிரிக்கப்பட வேண்டும் எனும் விருப்பத்தை ஆவணத்தின் மூலம் தெரியபடுத்துவதே உயில் ஆகும். அவ்வாறு உயிலை உருவாக்கியவரை ஆங்கிலத்தில் "TESTATOR" என்று குறுப்பிடபடுவார்.

Object of Will :

  1. Testator - மரணம் அடைந்த பிறகு அவரின் சொத்துகளை அந்த உயிலின் படி பங்கிடவும்.

2. Testamentary Guardian - னை நியமிக்கவும்.

3. முன்பு எழுதிய உயிலினை இரத்து செய்யவும் அல்லது மாற்றுவதற்கும் உயில் பயன்

படுகிறது.

உசாத்துணை

[தொகு]
  1. ஆடிட்டர் ஜி. கார்த்திகேயன் (18 சூன் 2018). "உயிலே உன் ஆயுள் என்ன?". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 20 சூன் 2018.
  • வழக்கறிஞர் முனைவர் சோ.சேசாலம் எழுதிய ‘பெண்ணுரிமைச் சட்டங்கள்’
  • இந்துக்கள் சொத்துரிமைச் சட்டம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயில்&oldid=3576701" இலிருந்து மீள்விக்கப்பட்டது