உள்ளடக்கத்துக்குச் செல்

இருளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருளர்
1871-72இல் இருளர் ஆண்கள் சிலரை எடுக்கப்பட்ட புகைப்படம்.
மொத்த மக்கள்தொகை
203,382[1] (2011(மக்கள்தொகை கணக்கீட்டின்படி))
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இந்தியா
தமிழ்நாடு189,621
கேரளம்23,721
மொழி(கள்)
இருளா மொழி
தொடர்புள்ள இனக்குழுக்கள்
சோளகர், தமிழர், எருகளா , இருளப்பள்ளர்

இருளர் (Irulas) எனப்படுவோர் தமிழ்நாட்டின், கோவை மாவட்டத்திலும், கேரளத்திலும் வசிக்கும் பழங்குடியினர் ஆவர்.[2] இவர்கள் காடு சார்ந்த வாழ்வியலுக்கு பழக்கப்பட்டவர்கள். குறிப்பாக பாம்பு, எலி போன்றவற்றைப் பிடிப்பதிலும், அரிய பல்வகை மூலிகைகள் சேகரிப்பதிலும், விசத்தை முறிக்கும் மருந்து கொடுப்பதிலும் தேர்ந்தவர்கள். இவர்களின் சமுதாயப் படிநிலை மிகவும் தாழ்த்தப்பட்ட ஒன்றாகும். ஆகையால் இவர்கள் பழங்குடியினர் (Scheduled Tribe) என இந்திய அரசால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்கள். இவர்களது எண்ணிக்கை தோராயமாக 25,000 நபர்கள் என கணித்துள்ளனர்.[3][4] இவர்களின் மொழி வழக்கு இருளா மொழி என்றும் கூறப்படுகிறது.

சொற்பிறப்பு

[தொகு]
இருளர் பெண்

இருளர் என்பது தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் இருண்ட மக்கள் என்று பொருள்படும், இது இருள் என்ற மூல வார்த்தையிலிருந்து பெறப்படுகிறது. இது இருண்ட (கருமை) தோல் நிறத்தைக் குறிக்கிறது.[5]

தொன்மம்

[தொகு]

இவர்களின் பிறப்பு பற்றி இவர்கள் நடுவில் உள்ள நம்பிக்கை; மல்லன்- மல்லி ஆகிய தெய்வங்கள் உலகைச் சுற்றிப் பார்க்கக் கிளம்புகிறார்கள். கிழவி மலை என்னும் மலைக் குகையினுள் ஒலி கேட்டு இரு தெய்வங்களும் குகை வாசலையடைந்து பார்த்தபோது குரலுக்குரிய இருவரை அறிகிறார்கள். நிர்வாணமாய் ஓர் ஆணும் ஒரு பெண்ணும், அந்த ஆணின் பெயர் கொடுவன் மற்றும் பெண்ணின் பெயர் சம்பி ஆகும். நீங்கள் இனி கணவனும், மனைவியும் என்று மறைந்தன தெய்வங்கள். இவ்வழி பல இணைகள் பல்கிப் பெருகி குப்பிலிகா, ஆறுமூப்பு, செமக் காரர்கள், கரட்டி குலம், ஊஞ்சகுலம், வெள்ளக் குலம், குறுநகர் குலம், தேவனெ குலம், கொடுவே குலம், சம்பகுலம்... எனப் பனிரெண்டு குலங்களாகப் பல்கிப் பெருகிய இருளர் இனம். இதுவே தங்கள் இனத்தின் தோற்றம் குறித்து இருளர்கள் மதிக்கும் தொன்மம் ஆகும்.[6]

இவர்களின் தற்கால வாழ்வியல் சூழல் கேள்விக்கிடமாகவும் பெரும் மாற்றங்களுக்கு உட்பட்டும் நிற்கின்றது. காடு, சாதி சார்ந்த வாழ்வியலை மீறி நவீன பொது வாழ்வியலுடன் தங்கள் தனித்துவத்தையும் பேணி இணைவது இவர்களுக்கு சவாலாக அமைகின்றது.

தொல்லியல்

[தொகு]

இராக்கிகர்கி தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளில் இரண்டை மரபணு சோதனை செய்ததில், அம்மரபணுகள், இப்பழக்குடி இனத்தின் மரபணுவுடன் மிகவும் ஒத்துள்ளது என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.[7]

பரவலர் பண்பாட்டில்

[தொகு]

2021 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான ஜெய் பீம் திரைப்படத்தில் இருளர் இனமக்கள் பாத்திரங்கள் முக்கிய பாத்திரங்களாக இருந்தன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "A-11 Individual Scheduled Tribe Primary Census Abstract Data and its Appendix". censusindia.gov.in. Government of India. பார்க்கப்பட்ட நாள் 28 October 2017.
  2. Perialwar, R. (1979), Phonology of Irula with Vocabulary, Annamalai University
  3. World Bank grant to improve standard of living for rat-catchers
  4. Irula Project Proposal and site report
  5. "Irular in India". Joshua Project. Frontier Ventures. பார்க்கப்பட்ட நாள் 2016-06-05.
  6. ஜனகப்பிரியா (13 ஏப்ரல் 2016). "இருளர் காவியம்". கீற்று. பார்க்கப்பட்ட நாள் 16 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  7. "‘Harappan civilisation is 7000 to 8000 years old’: Scientists studying DNA samples from Rakhigarhi site find". ஓப் இந்தியா. https://www.opindia.com/2023/12/harappan-civilisation-is-7000-8000-years-old-scientists-studying-dna-samples-from-rakhigarhi-site-find/. பார்த்த நாள்: 15 September 2024. 

வெளி இணைப்புகள்

[தொகு]


கேரளத்தில் ஆதிவாசிகள்

அடியர்அரணாடர்ஆளார்எரவள்ளர்இருளர்காடர்கனலாடிகாணிக்காரர்கரவழிகரிம்பாலன்காட்டுநாயக்கர்கொச்சுவேலன்கொறகர்குண்டுவடியர்குறிச்யர்குறுமர்சிங்கத்தான்செறவர்‌மலையரயன்மலைக்காரன்மலைகுறவன்மலைமலசர்மலைப்பண்டாரம்மலைபணிக்கர்மலைசர்மலைவேடர்மலைவேட்டுவர்மலையடியர்மலையாளர்மலையர்மண்ணான்மறாட்டிமாவிலர்முடுகர்முள்ளுவக்குறுமன்முதுவான்நாயாடிபளியர்பணியர்பதியர்உரிடவர்ஊராளிக்குறுமர்உள்ளாடர்தச்சனாடன் மூப்பன்விழவர்சோலநாயக்கர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இருளர்&oldid=4090482" இலிருந்து மீள்விக்கப்பட்டது