திப்பு சுல்தான்
திப்பு சுல்தான் (நவம்பர் 20, 1750, தேவனஹள்ளி – மே 4, 1799, ஸ்ரீரங்கப்பட்டணம்), மைசூரின் புலியென அழைக்கப்பட்டவர். 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூரின் அரசை ஆண்டவர். திப்பு சுல்தான் ஹைதர் அலியின் இரண்டாம் தாரமான ஃவாதிமாவின் மகனாவார். பிரித்தானியப் படைகளுடனான இரண்டாம் ஆங்கில-மைசூர்ப் போரில் ஹைதர் அலி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாகவிருந்த திப்பு தனது தந்தையின் மரணத்திற்குப் பின்னர் மைசூரின் மன்னரானார். ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு அகற்றுவதற்காகப் பிரான்சின் மாவீரன் நெப்போலியனுடன் பேச்சுவார்த்தைகூட நடத்தினார்.[1]மூன்றாம் மற்றும் நான்காம் ஆங்கில-மைசூர்ப் போர்களில் பிரித்தானிய அரசினாலும் அதன் கூட்டுப் படைகளினாலும் தோற்கடிக்கப்பட்டார். மே 4, 1799 ஆம் ஆண்டு தனது ஆட்சித் தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தில் போரின்போது இறந்தார்.
திப்பு சுல்தான் Tippu Sultan | |
---|---|
மைசூர் மன்னன் | |
திப்பு சுல்தானின் உருவப்படம் (1792) | |
ஆட்சி | 1782–1799 |
முன்னிருந்தவர் | ஹைதர் அலி |
தந்தை | ஹைதர் அலி |
தாய் | பாக்ர்-உன்-நிசா |
தமிழக இசுலாமிய ஆட்சியாளர்கள் | |
---|---|
பாண்டிய சுல்தான்கள் | |
சையித் இப்ராகிம் | கி.பி. 1142 - 1207 |
செய்யிது சமாலுதீன் | கி.பி. 1293 -1306 |
தில்லி சுல்தானகம் | |
முகமது பின் துக்ளக் | கி.பி. 1323-1335 |
மதுரை சுல்தான்கள் | |
ஜமாலுத்தீன் ஹஸன்ஷா | |
அல்லாவுடீன் உடான்றி | |
குட்புதீன் | |
நாசிருதீன் | |
அடில்ஷா | |
பஃருடீன் முபாரக் ஷா | |
அல்லாவுடீன் சிக்கந்தர்ஷா | |
ஆற்காடு நவாப்புகள் | |
நவாப் சுல்பிகர் அலி கான் | கி.பி. 1692 - 1703 |
நவாப் தாவுத் கான் | கி.பி. 1703 - 1710 |
நவாப் முகம்மது சதாத்துல்லா கான் I | கி.பி. 1710 - 1732 |
நவாப் தோஸ்த் அலி கான் | கி.பி. 1732 - 1740 |
நவாப் ஸஃப்தார் அலி கான் | கி.பி. 1740 - 1742 |
நவாப் முகம்மது சதாத்துல்லா கான் II | கி.பி. 1742 - 1744 |
நவாப் அன்வர்தீன் முகம்மது கான் | கி.பி. 1744 - 1749 |
நவாப் சந்தா சாகிப் | கி.பி. 1749 - 1752 |
நவாப் முகம்மது அலி கான் வாலாஜா | கி.பி. 1749 - 1795 |
நவாப் உத்தாத் உல் உம்ரா | கி.பி. 1795 - 1801 |
நவாப் ஆசிமுத்துல்லா | கி.பி. 1801 - 1819 |
நவாப் ஆசம் ஜா | கி.பி. 1819 - 1825 |
நவாப் குலாம் முகம்மது கவுஸ் கான் | கி.பி. 1825 - 1855 |
மற்றவர்கள் | |
முகம்மது யூசுப்கான் | கி.பி. 1759 - 1764 |
திப்பு சுல்தான் | கி.பி. 1782- 1799 |
edit |
இளமைக்காலம்
தொகுதிப்பு சுல்தான் பெங்களூர் நகருக்கு வடக்கே 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேவன அள்ளியில் 1750-ஆம் ஆண்டு நவம்பர் இருபதாம் நாள் பிறந்தார். இவரது தந்தையான ஐதர் அலி மைசூர் அரசின் படையில் அதிகாரியாக இருந்தார். தாயார் கடப்பாக் கோட்டையின் ஆளுனரின் மகளான மீர் முயினுதீன் ஆவார். ஐதர் அலி முறையான கல்வி கற்றவர் அல்ல. இதனால் அவர் திப்புசுல்தானுக்கு ஆசிரியர்களை நியமித்து உருது, பெர்சியன், கன்னடம், அரபி மொழிகளும் குரான், குதிரையேற்றம், வாள்வீச்சு, துப்பாக்கி சுடுதல், இசுலாமிய நீதிமுறை போன்றவற்றிலும் பயிற்சி பெற்றார். திப்பு சுல்தான் தனது 17-ஆம் வயதிலிருந்து அரசியல், போர் நடவடிக்கைகளைத் தலைமையேற்று நடத்தினார்.
மைசூர் அரசாட்சி
தொகுஇறப்பு
தொகுவெல்லெஸ்லி பிரபு துணைப்படை திட்டத்தின் ஒரு பகுதியாக மைசூரில் ஆங்கிலேய படை ஒன்றை நிரந்தரமாக வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.இதற்கு திப்பு சுல்தான் உடன்படவில்லை. இதனால் ஆங்கிலேயர் போரை அறிவித்தனர். இது நான்காம் மைசூர் போர் என்று அழைக்கப்படுகிறது. இது 1799 ஆம் ஆண்டு நடைபெற்றது. ஜெனரல் டேவிட் பெய்ர்டு ஸ்ரீரங்கப்பட்டிணத்தின் மீது திடீர் தாக்குதல் நடத்தி கைப்பற்றினார். அமைதி உடன்படிக்கைக்கான திப்புவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இறுதி மோதலில் காயமுற்ற திப்பு ஒரு ஐரோப்பிய படைவீரனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
நிர்வாகம்
தொகு"கிழக்கிந்திய கம்பெனியின் குலை நடுக்கம் " திப்புவின் மைசூர் அரசைப் பார்த்து லண்டன் பத்திரிகைகள் வியந்தனர்.
"ஆம் நான் அவனைக்கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தை கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிர்ஷ்டம்". என்று கடிதம் எழுதுகிறான் மார்க்வெஸ் வெல்லஸ்லி.[மேற்கோள் தேவை]
ஆடுகளைப் போல 2௦௦ ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம் என்று மரணப்படுக்கையில் திப்பு முழங்கினார்.[மேற்கோள் தேவை]
மைசூர் ஏவுகணைகள்
தொகுதிப்பு சுல்தானின் ஏவுகணைத் தொழில்நுட்பமே பிற்கால பிரிட்டிஷாரின் ஏவுகணைத் தொழில்நுட்பத்தின் முன்னோடி.
இலண்டன் அருகில் ஊல்ரிச் எனும் ஊரில் உள்ள ரோதுண்டா அருங்காட்சியகத்தில் திப்பு சுல்தான் பயன்படுத்திய ஏவுகணைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பார்க்க இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முயற்சி எடுத்துக்கொண்டார். உலக அளவில் முதல் இராணுவ ஏவுகணைகள் அவையே என்பதையும் பிற்காலத்தில் பிரிட்டிஷார் ஆய்வு நடத்தி அவற்றைத் திருத்தியமைத்துப் பயன்படுத்தியதையும், மேலும் இது இந்தியாவில் திப்பு சுல்தானின் சொந்த தொழில்நுட்பம் என்பதையும், பிரெஞ்சு நாட்டினரிடமிருந்து கற்றது அல்ல என்பதினையும் சர் பெர்னார்டு லோவல் எனும் பிரபல பிரித்தானிய விஞ்ஞானி எழுதிய ’விண்வெளி ஆராய்ச்சிகளின் தோற்ற மூலங்களும், பன்னாட்டுப் பொருளாதாரங்களும் (The Origins and International Economics of Space Explorations) எனும் நூலின் உதவியோடு அப்துல் கலாம் நிரூபிக்கிறார்.[2]
கப்பற்படை
தொகுபொருளாதாரம்
தொகுவெளியுறவு
தொகுசமூக அமைப்பு
தொகுநீதி அமைப்பு
தொகுதிப்பு சுல்தான் இந்து மற்றும் முஸ்லீம் குடிமக்களுக்காக இரு சமூகங்களிலிருந்தும் நீதிபதிகளை நியமித்தார். ஒவ்வொரு மாகாணத்திலும், முஸ்லிம்களுக்குக் காஜி மற்றும் இந்துக்களுக்கு பண்டிட் நியமிக்கப்பட்டிருந்தது. உயர் நீதிமன்றங்களும் இதே போன்ற அமைப்பைக்கொண்டிருந்தது.[3]
ஒழுக்க அறம் நிர்வாகம்
தொகுஅவரது நிர்வாகத்தில் மதுபானம் மற்றும் விபச்சாரம் கறாராகத் தடைசெய்யப்பட்டிருந்தது.[4] கஞ்சா போன்ற போதை தரும் பொருட்களின் பயன்பாடு மற்றும் உற்பத்தியும் தடைசெய்யப்பட்டது.[5]
கேரளாவில் பல கணவர் மனம் நடைமுறைகளை, திப்பு சுல்தானால் தடைசெய்யப்பட்டது. முந்தைய காலங்களில் முலை வரி பண்பாட்டால் கேரளாவில் அனைத்து பெண்களின் மார்பகங்களையும் மறைப்பது நடைமுறையில் இல்லாததினால், அனைத்து பெண்களும் மார்பகங்களை மறைக்கலாம் என்பதற்காக ஒரு ஆணையை நிறைவேற்றினார்.[6][7]
ஆணை பின்வருமாறு:
பாலகாட்டின் முழு பிரதேசங்களிலும் (அதாவது, மலை காடுகளின் கீழே உள்ள நாட்டில்) பெரும்பாலான இந்துப் பெண்கள் தங்கள் மார்பகங்களையும் மறைக்காமல், தலைவிரித்து அவிழ்த்துக் கொண்டு செல்கிறார்கள். இது விலங்குகளைப் போன்று நடத்துவதாகும். இந்தப் பெண்களில் யாரும் இனி ஒரு முழுமையான அங்கி (மார்பகங்களை மறைக்க), மற்றும் முக்காடு இல்லாமல் வெளியே செல்லக் கூடாது.[8]
சமயக் கொள்களைகள்
தொகுஇந்துக்களுடனான உறவுகள்
தொகுஇந்து அதிகாரிகள்
தொகுதிப்பு சுல்தானின் பொருளாளராகக் கிருஷ்ணா ராவ் என்பவரும், ஷாமையா ஐயங்கார் அவரது தபால் மற்றும் காவல்துறை அமைச்சராகவும், அவரது சகோதரர் ரங்கா ஐயங்கார் ஒரு அதிகாரியாகவும், பூர்ணையா என்பவர் "மிர் அசாஃப்" எனும் மிக முக்கியமான பதவியையும் வகித்தார். முகலாய அரசவையில், மூல்சந்த் மற்றும் சுஜன் ராய் அவரது தலைமை முகவர்களாக இருந்தனர், மேலும் அவரது "பெஷ்கர்" தலைவரான சுபா ராவும் என்பவரும் ஒரு இந்துவாக இருந்தார்.[9]
கைதிகளை நடத்தியவிதம்
தொகுஆட்சியின் சிறப்பு
தொகு- அக்காலத்திலேயே கலப்பின விதைகள், உயர்ரகப் பயிர்கள் என்று விவசாயத்தில் பல புதுமைகளைப் புகுத்தினார்.[சான்று தேவை]
- கப்பல் கட்டும் தளம் அமைத்தார்[சான்று தேவை]
- இப்போதுள்ள பொதுவிநியோகத்திட்டம் அவர் ஆட்சியில் அப்போதே செயல்பாட்டில் இருந்தது.[சான்று தேவை]
- கிராமங்களும் நகரங்களுக்குச் சமமான வளர்ச்சியை அடைந்தன.[சான்று தேவை]
- போரில் ராக்கெட் தாக்குதல்களைப் பயன்படுத்தினார். இதற்குச் சான்றாக, வாலோபஸ் விண்வெளி நிலையத்தில் உள்ள ஒரு சித்திரத்தில் போரில் ஆசியர்கள் ராக்கெட் பயன்படுத்தும் படம் உள்ளதையும் அது மைசூர் போரில் திப்பு சுல்தான் படை ஆங்கிலேயர்மேல் நடத்திய தாக்குதலைக் குறிப்பதையும் இந்தியாவின் குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கண்டு வியந்துள்ளார்.
காரன் வாலீஸின் சிலை
தொகுதிப்பு சுல்தானுக்கு ஆதரவாக இருந்தவர்களை சூழ்ச்சியாலும், திப்பு சுல்தானை மைசூர் யுத்தத்திலும் தோற்கடித்த காரன் வாலீஸ், ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கையின்படி பணத்திற்காகத் திப்புவின் இரண்டு மகன்களையும் பணயமாகப் பிடித்து வைத்துக் கொண்டான். சென்னை கோட்டை அருங்காட்சியகத்தில் உள்ள காரன் வாலீஸ் சிலையில் சரணடைந்த திப்புவின் மகன்களைத் தன்னுடன் வைத்துக் கொண்டிருக்கும் காட்சி சித்திரிக்கப்பட்டிருக்கிறது. துரோகத்தின் சின்னமாகக் கருதப்பட்ட இச்சிலை, பொதுமக்களின் எதிர்ப்பால், காரன் வாலீஸ் சிலை சென்னையில் ஊர்ப்பகுதியிலிருந்து அகற்றப்பட்டு, சென்னை ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. [10]
ஏலம்
தொகு2015 ஆம் ஆண்டு இவர் பயன்படுத்திய 30 ஆயுதங்கள் லண்டனில் உள்ள போன்ஹாம்ஸ் ஏல நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் 6 மில்லியன் பவுண்டுகள் வசூலானது.[11]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 இந்திய வரலாற்றின் இணையில்லா வீரர் திப்பு சுல்தான்
- ↑ இந்தியா 2020 ; நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் லிமிடெட்; பக்கம் 37
- ↑ Panikkar, K.N (1991). "Men of Valour and Vision". Social Scientist. 19 (8): 110. doi:10.2307/3517708. JSTOR 3517708.
- ↑ Sastri, K.N.V (1943). Moral Laws under Tipu Sultan. Indian History Congress. p. 269. Retrieved 25 August 2019.
- ↑ B, Shreedhara Naik. The society and politics in South Kanara 1500 A D to 1800 A D (PDF) பரணிடப்பட்டது 2020-07-26 at the வந்தவழி இயந்திரம். p. 211. Retrieved 7 September 2019.
- ↑ Miller, Rolland E (27 April 2015). Mappila Muslim Culture. p. 34. ISBN 9781438456027. Retrieved 28 March 2020.
- ↑ Sastri, K.N.V (1943). Moral Laws under Tipu Sultan. Indian History Congress. p. 270. Retrieved 25 August 2019.
- ↑ Sastri, K.N.V (1944). The Proceedings of the Indian History Congress. p. 270. Retrieved 20 November 2019.
- ↑ Hasan 1971, History of Tipu Sultan, pp. 357–8
- ↑ சிலைகள் சொல்லும் சேதிகள்
- ↑ சுல்தான் ஆயுதங்கள் 6 மிலியன் பவுண்டுகளுக்கு மேல் ஏலம் பிபிசி தமிழ் 22 ஏப்ரல் 2015
வெளி இணைப்பு
தொகு- Tipu Sultan remembered on his 212th martyrdom anniversary – TCN News
- The Tiger of Mysore – Dramatised account of the British campaign against Tipu Sultan by G. A. Henty, from குட்டன்பேர்க் திட்டம்
- Biography by Dr. K. L. Kamat
- Coins of Tipu Sultan
- Illuminated Qurʾān from the library of Tippoo Ṣāḥib, Cambridge University Digital Library