டோனி டேன் கெங் யம்
டோனி டேன் கெங் யம் (Tony Tan Keng Yam, பிறப்பு: பெப்ரவரி 7, 1940) சிங்கப்பூர் நாட்டின் 7-வது அதிபராக 2011 ஆகத்து மாதம் தெரிவு செய்யப்பட்டார். இவர் 1995 முதல 2003 வரை துணைப் பிரதமராக இருந்துள்ளார்.
டோனி டேன் கெங் யம் 陈庆炎 | |
---|---|
சிங்கப்பூர் அதிபர் தேர்வு | |
பதவியில் 1 செப்டம்பர் 2011 | |
பிரதமர் | லீ சியன் லூங் |
Succeeding | செல்லப்பன் ராமநாதன் |
உள்துறை அமைச்சர் | |
பதவியில் 1 ஆகத்து 2003 – 1 செப்டம்பர் 2005 | |
பிரதமர் | லீ சியன் லூங் |
முன்னையவர் | பதவி உருவாக்கப்பட்டது |
பின்னவர் | சண்முகம் ஜெயக்குமார் (தேசிய பாதுகாப்பு) |
சிங்கப்பூர் துணை பிரதமர் | |
பதவியில் 1 ஆகத்து 1995 – 1 செப்டம்பர் 2005 | |
பிரதமர் | கொஹ் சோக் டோங் லீ சியன் லூங் |
முன்னையவர் | ஆங் டென்ங் சியாங் |
பின்னவர் | வாங் கான் செங் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 7 பெப்ரவரி 1940 சிங்கப்பூர் |
அரசியல் கட்சி | சுயேட்சை (2011–தற்போதும்) |
பிற அரசியல் தொடர்புகள் | மக்கள் அதிரடி கட்சி (2011 க்கு முன்னர்) |
துணைவர் | மேரி சீ பீ கியாங் |
பிள்ளைகள் | 3 மகன்கள் 1 மகள் |
தொழில் | கணிதவியலாளர் வங்கியாளர் |
இணையத்தளம் | Official website |
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பட்டம் பெற்றவர் டான். மேலும் மாசசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் முதுநிலைப் படிப்பை முடித்தவர். அடிலைட் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். சிங்கப்பூர் முதலீட்டுக் கழக நிறுவனத்தில் துணைத் தலைவராக பதவி வகித்துள்ளார். மேலும் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் சீன வம்சவாளியினர் ஆவர்
பொது
தொகு1979ம் ஆண்டு மக்கள் கட்சியில் இணைந்து செயல்பட ஆரம்பித்தார் இவர் பல்வேறு அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார். அதிபர் தேர்தலில் நிற்பதற்காக 2011 சூன் மாதம் கட்சி உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகினார். ஏனெனில் சிங்கப்பூர் அதிபர் பதவி கட்சி சார்பற்றது
2011 ஆகத்து மாதம் நடைபெற்ற சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் டோனி டான் 7269 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மொத்தம் உள்ள 20.1 லட்சம் வாக்காளர்களில் 35 சவீதம் பேர் இவருக்கு ஆதரவாக வாக்களித்தனர்
சிங்கப்பூரில் அதிபரை முன்பு நாடாளுமன்றம்தான் தேர்வு செய்து வந்தது. 1993 முதல் மக்கள் வாக்களித்து தேர்வு செய்து வருகின்றனர்.