லண்டன் வன்முறைகள் 2011
இந்தக் கட்டுரையில் அல்லது கட்டுரைப் பகுதியில் விரிவாக்க வேலை நடந்து கொண்டிருக்கிறது. உங்களால் உதவ முடியுமெனில் இக்கட்டுரையை வளர்த்தெடுப்பதில் உதவுங்கள். இக்கட்டுரை அல்லது பகுதி பல நாட்களுக்கு தொகுக்கப்படாமல் காணப்படின், இந்த வார்ப்புருவை நீக்கி விடுங்கள். நீங்கள் இந்த வார்ப்புருவைச் சேர்த்த தொகுப்பாளராக இருந்து, நீங்கள் இதனைத் தொகுக்கும் போது {{in use}} என்ற வார்ப்புருவைச் சேர்த்து விடுங்கள்.
இந்த கட்டுரை Alexbot (பேச்சு | பங்களிப்பு) ஆல் 13 ஆண்டுகள் முன்னர் கடைசியாகத் தொகுக்கப்பட்டது. (இற்றைப்படுத்துக) |
பிரித்தானியாவில் அண்மைக்காலங்களில் ஏற்பட்ட வன்முறைகளுள் ஆகத்து 6 2011 ஆரம்பித்த வன்முறை பாரதூரமான வன்முறையாகக் கருதப்படுகின்றது. பிரித்தானியாவின் பிரதமர், துணைப் பிரதமர், நிதி அமைச்சர், உள்துறை அமைச்சர், லண்டன் மேயர் என அரசாங்கத்தின் முக்கியத்தர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் விடுமுறையைக் கழிக்கச் சென்ற நிலையில் லண்டனில் வரலாறு காணாத இக்கலகம் இடம்பெற்றுள்ளது. கறுப்பின மக்கள் செறிவாக வாழ்கின்ற டோட்டன்ஹாமில் ஆரம்பித்த கலகம் லண்டனின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியுள்ளது.
பின்னணி
வடக்கு லண்டன், டோட்டன்ஹாம் பகுதியில் கறுப்பின இளைஞர் ஒருவர் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன், இங்கு சிக்கல் ஆரம்பித்தது. ஆகத்து 4 ல் மார்க் டக்கன் என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையான 29 வயதுடைய கலப்பின இளைஞர் ஒருவரைப் பொலீஸார் சுட்டுக்கொன்றனர். அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆகத்து 6 திகதி புரோட்வோட்டர் பாமில் இருந்து டோட்டன்ஹாம் காவல் நிலையம் வரை அமைதி ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டது. காவல் நிலையம் முன் திரண்டு நீதி கேட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை காவல்துறையினர் பலப்பிரயோகம் செய்து கலைத்தபோது, கலவரம் பரவியது. சிறியளவிலான ஆர்ப்பாட்டமே இவ்வாறு பாரிய கலவரமாக அங்குள்ள பல நகரங்களுக்கும் வியாபித்துள்ளது.
தொடரும் கலவரங்கள்
ஆகத்து 6 2011 டோட்டன்ஹாமில் ஆரம்பித்த கலகம் லண்டனின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியுள்ளது. லண்டனின் பல இடங்களில் கலவரங்களும் வன்முறையும் சூறையாடல்களும் நடந்துள்ளன. வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. குரோய்டான் நகரில் 140 ஆண்டு பழமையான டிபார்ட்மென்டல் ஸ்டோரை கலவரக்காரர்கள் தீக்கிரையாக்கினர். பர்மிங்ஹாம், லிவர்ப்பூல், மான்செஸ்டர், நாட்டிங்ஹம், பிரிஸ்டல் ஆகிய இடங்களிலும் வீதிக் கலவரங்கள் வெடித்துள்ளன.
கலவரத்துடன் தொடர்புடைய முதலாவது மரணம்
தெற்கு லண்டனில் ஆகத்து 8 அன்று நடந்த வன்செயல்களின் போது சுடப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். கலவரத்துடன் தொடர்புடைய முதலாவது மரணமாக இது கூறப்படுகிறது. பர்மிங்ஹாமில் வின்சன் கிறீன் என்ற இடத்தில் வீதிக் கலவரங்களில் ஈடுபட்டவர்களிடம் இருந்து தமது குடும்பத்தினரையும் சுற்றுப் புறத்தையும் காப்பதற்காகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று பாக்கித்தானிய இளைஞர்கள் மீது ஆகத்து 9 அன்று வன்முறைக் கும்பல் ஒன்று வாகனம் ஒன்றை ஏற்றிக் கொன்றனர்.
தகவல் பரிமாற்றம்
இங்கிலாந்தில் வன்முறைகள் இடம்பெற்று வரும் நிலையில் அங்கு வன்முறையாளர்கள் தங்கள் தகவல் பரிமாற்றத்திற்கு பிளக்பெரி மெசஞ்சர் சேவை மற்றும் பேஸ்புக், டுவிட்டர் வலையமைப்புகளை பாவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வன்முறைகளில் ஈடுபட்டுள்ளோர் தங்களிடையே தகவல்களைப் பரிமாற்றுவதற்கு இவ்வசதிகள் பெரும் பங்களிப்பு செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவற்றின் ஊடாகவே எங்கு அடுத்து வன்முறை நிகழப்போகின்றது? எங்கே ஒன்று கூடுவது, எவற்றைத் தாக்குதவது மற்றும் கொள்ளையடிப்பது தொடர்பில் தகவல்கள் பரிமாற்றப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய இளைஞர்களில் 37% பிளக்பெரி கையடக்கத்தொலைபேசிகளையே பயன்படுத்தி வருகின்றனர். இக் கையடக்கத்தொலைபேசிகளுக்கான பிரத்தியேக தகவல் பரிமாற்ற சேவையே பிளக்பெரி மெசஞ்சர் ஆகும். இதன்மூலம் பலருக்கு ஒரே நேரத்தில் வேகமாகவும், துரிதமாகவும், இலவசமாகவும் தகவல்களை அனுப்பமுடியும். மேலும் இதன் சிறப்பம்சம் அதன் பாதுகாப்பு பொதுவாக பிளக்பெரி மெசஞ்சர் சேவையின் மூலம் தகவல்களை அனுப்பும் போது அவற்றின் மென்பொருள் குறியீட்டுச்சொற்களை (என்கிறிப்ஷன்) பரிசீலிக்க முடியாது. மேலும் பிளக்பெரி மெசஞ்சர் பாவனையாளர்கள் பின்(இரகசிய) இலக்கமொன்றினை பரிமாறிக் கொள்ள வேண்டும் .இது அவர்களின் தகவல் பரிமாற்றத்தை இரகசியமாக வைத்திருக்க உதவுகின்றது. இதனை நன்கு அறிந்துவைத்துள்ள கலகக்காரர்கள் இவற்றைப் பயன்படுத்துவது தற்போது தெரியவந்துள்ளது. இது அங்குள்ள பாதுகாப்புப் பிரிவினருக்கு பெரும் தலையிடியைக் கொடுத்துள்ளது.
மூலம்
- England riots: Fightback under way says PM, பிபிசி, ஆகத்து 10, 2011
- பிரிட்டனின் பல நகரங்களில் வன்முறை, பிபிசி, ஆகத்து 10, 2011
- லண்டனில் மூன்றாவது நாளாகவும் கலவரம்; பல இடங்களுக்கும் பரவியது, தினகரன், ஆகத்து 10, 2011
- லண்டன் கலவரம் பிற நகரங்களுக்கும் பரவியது : திக்குமுக்காடுகிறது பிரிட்டன், தினமலர், ஆகத்து 10, 2011
- லண்டன் வீதிகளில் 16 ஆயிரம் பொலிஸ் குவிப்பு, உலக செய்திகள், ஆகத்து 10, 2011
- London riots spiral out of control, இன்டிபென்டன், ஆகத்து 10, 2011
- பிரிட்டனில் சூறையாடலில் ஈடுபடுவோர் யார்?, பிபிசி, ஆகத்து 10, 2011
- லண்டன் கலவரம்: பிர்மிங்ஹாமில் 3 ஆசியர்கள் கொலை, தட்ஸ் தமிழ், ஆகத்து 10, 2011